×

ஊனம் ஒரு தடை இல்லை… தங்க மங்கை அவனி தன்னபிக்கை

புதுடெல்லி: ‘லட்சியத்தை  அடைய மாற்றுத்திறனாளி என்ற இயலாமை ஒரு தடையாக இல்லை’என்று பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லெகரா தன்னம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். பாரா ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை அவனி லெகரா ஒரு சட்டக்கல்லூரி மாணவி. அவர் நேற்று செய்தி  ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:  விபத்தினால்  இயல்பு வாழ்க்கை மாறினாலும்,  நான் விரும்பியதை அடைய அந்த இயலாமை தடையாக இல்லை. அவனி செய்ய முடிந்ததை  ஏன்  நம்மால் செய்ய முடியாது என்று எனது வெற்றியால் யாராவது ஒருவருக்கு உத்வேகம் கிடைக்கும் என்றால் அது பெரிய விஷயமாக இருக்கும். மாற்றுத்திறனாளியாக  இருப்பதற்காக யாரும் வருத்தப்பட வேண்டாம். என்ன செய்ய  விரும்புகிறீர்களோ அதை செய்யுங்கள். உங்களால் ஏதும் செய்ய முடியாது என்று   சொல்ல யாருமில்லை. முதலில் நீங்கள் உங்களை நம்ப வேண்டும்.  கடின  உழைப்புக்கு ஈடு ஏதுமில்லை. எனவே 100 சதவீதம் உழைப்பை   கொடுங்கள். நிச்சம் விரும்பியதை அடைய முடியும். வாழ்க்கை உங்களை  தாக்கும்போது, இன்னும் உறுதியாக திருப்பித் தாக்குங்கள். எனது  தீவிர பயிற்சி காரணமாக  கல்லூரிக்கு ஒழுங்காக செல்ல முடியவில்லை.  நண்பர்கள், உறவினர்களை சந்திக்க, நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியவில்லை. எனது பெற்றோரும், சகோதரரும் மிகப்பெரிய ஆதரவை  அளித்தனர்’என்று  கூறியுள்ளார்….

The post ஊனம் ஒரு தடை இல்லை… தங்க மங்கை அவனி தன்னபிக்கை appeared first on Dinakaran.

Tags : Thanga Mangai ,Avani Tannabhikkai ,New Delhi ,Avani Legara ,Danga Mangai Avani ,Dinakaran ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி